search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி கட்டுப்பாடு"

    தீபாவளியன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு உள்ளதால் பொதுமக்களும், சிறுவர்-சிறுமிகளும் தாங்கள் வாங்கிய பட்டாசுகளை முன் கூட்டியே வெடிக்க தொடங்கி விட்டனர். #Diwali
    சென்னை:

    தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது.

    தமிழகத்தை பொறுத்தவரை பட்டாசு வெடிக்கும் 2 மணி நேரம் எது என்பதை தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியது.

    அதன்படி தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் என மொத்தம் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழக அரசு நேரம் நிர்ணயித்தது.

    இந்த உத்தரவை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும், அதிக ஒலி எழுப்பும் சரவெடி போன்ற பட்டாசுகளை தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.1000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

    தீபாவளி பண்டிகைக்கான பட்டாசுகளை பொதுமக்கள் பலர் சிவகாசியில் இருந்து முன்கூட்டியே ஆர்டர் செய்து வரவழைத்து விட்டனர். இன்னும் பலர் தீபாவளி சீட்டில் சேர்ந்து ஏராளமான பட்டாசுகள் வாங்கி விட்டனர்.

    மேலும் கடந்த வாரம் முதலே பட்டாசு கடைகளும் போடப்பட்டு விட்டதால் பொதுமக்களும், சிறுவர்- சிறுமிகளும் தங்களுக்கு வேண்டிய பட்டாசுகளை வாங்கி விட்டனர்.

    வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தினத்தன்று காலை முதல் இரவு வரை பொதுமக்கள் தொடர்ந்து பட்டாசு வெடிப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு உள்ளதால் வாங்கிய பட்டாசுகளை வெடிக்க 2 மணி நேரம் போதாது.

    இதனால் பொதுமக்களும், சிறுவர்-சிறுமிகளும் தாங்கள் வாங்கிய பட்டாசுகளை முன் கூட்டியே வெடிக்க தொடங்கி விட்டனர். கடந்த சில நாட்களாக சிலர் மட்டுமே பட்டாசு வெடித்து வந்தனர். ஆனால் நேற்று மாலை முதலே சென்னையில் பெரும்பாலானோர் பட்டாசு களை வெடிக்கத் தொடங்கினார்கள்.

    நேற்று இரவு சென்னையில் அனைத்து இடங்களிலும் பட்டாசு சத்தம் காதை பிளந்தது. சென்னையில் உள்ள தெருக்களில் குழந்தைகள், பெண்கள் மத்தாப்பு, புஸ்வானம், சங்குசக்கரம் உள்ளிட்ட வெடிகளை வெடித்தனர்.

    இன்றும் நாள் முழுவதும் சிறுவர்கள் பட்டாசு வெடித்தனர். இன்று இரவில் பட்டாசு வெடிப்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம். #Diwali

    ×